Siththarkal
Home / About Us /Siththarkal
rpj;ju;fs; kw;Wk; re;epahrpfs;
ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் எப்பபொழுதும் சித்தர்கள் நடமாடுகின்ற ஆலயமாகவே இருந்து வருகின்றது தம்மை வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் இவ்வாலயச்சூழலில் சித்தர்கள் நடமாடிக்கொண்டே இருக்கின்றனர் சிவயோகசுவாமிகள், முருகேசு சுவாமி கள் உட்பட எமது நாட்டைச்சேர்ந்த சித்தர்கள் பலர் இவ்வாலயச்சூழலில் தங்கள் திருவடித் தடங்களைப் பதித்துள்ளனர். இப்பேறு பெற்ற புண்ணிய பூமியில் ஜேர்மன் சுவாமிகள் ஜேர்மனி, ஆனைக்குட்டிசுவாமிகள் பிரித்தானியா, நரிக்குட்டிசுவாமிகள் அவுஸ்திரேலியா, பன்றிக்குட்டிசுவாமிகள் தென்னிந்தியா,என்றழைக்கப்படும் வெளிநாட்டுச்சித்தர்களும் இவ்வாலயச்சூழலில்சமகாலத்தில் வாழ்ந்துள்ளனர். 1965ஆம் ஆண்டு ஆவணிமாதம் 26ஆம் திகதி வீரகேசரிப்பத்திரிகையிலும் இந்த நான்கு சித்தர்கள் பற்றிய விசேட செய்தி ஒன்றும்பிரசுரமாகியிருந்தது.இவர்களில் ஜேர்மன் சுவாமிகள் செல்வச்சந்நிதியில் மிகநீண்ட காலம் தனது தவவாழ்க்கையை வாழ்ந்து 1980 இல் இப்புண்ணிய பூமி சந்நிதியில் சமாதியடைந்ததும் குறிப்பிடத்தக்கது